அலட்சிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி., உத்தரவு
அலட்சிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி., உத்தரவு
ADDED : மார் 22, 2025 05:42 AM

சென்னை: ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தி உள்ளார்.
அப்போது, அவர் பிறப்பித்த உத்தரவு: மாநிலம் முழுதும் ரவுடிகள் எத்தனை பேர் சிறையில் உள்ளனர்; ஜாமினில் வெளிவந்துள்ள ரவுடிகள் எத்தனை பேர்; வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ள ரவுடிகள் குறித்த விபரங்களை சேகரித்து, உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ரவுடிகள் குறித்து உளவு போலீசார் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காத, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களுக்கு, முதலில், 'மெமோ' கொடுக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால், 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். அதேபோல, ரவுடிகள் கண்காணிப்பு குழு மற்றும் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.