உள்ளடக்கத்திற்கு செல்ல

வாரம் இரண்டு நாட்கள் மனுக்கள் பெற டி.ஜி.பி., உத்தரவு
வாரம் இரண்டு நாட்கள் மனுக்கள் பெற டி.ஜி.பி., உத்தரவு
ADDED : ஜூன் 24, 2026 05:28 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'போலீஸ் அதிகாரிகள், வாரத்தில் இரண்டு நாட்கள், பொது மக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற வேண்டும்' என, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
பொதுமக்கள் எந்த நேரத்திலும், காவல் துறையினரை அணுகலாம் என்ற நடைமுறையுடன், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், டி.எஸ்.பி., - எஸ்.பி., - டி.ஐ.ஜி., மற்றும் ஐ.ஜி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள், வாரம் தோறும் புதன் மற்றும் சனிக்கி ழமை, காலை, 11:00 மணியில் இருந்து, மதியம், 1:00 மணி வரை, பொது மக்களிடம் நேரடியாக புகார் மனுக்கள் பெற வேண்டும்.
இதற்காக குறைதீர்வு முகாம் நடத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
