தினகரன் முடிவை மறுபரிசீலனை செய்வார்: அண்ணாமலை நம்பிக்கை
தினகரன் முடிவை மறுபரிசீலனை செய்வார்: அண்ணாமலை நம்பிக்கை
ADDED : செப் 05, 2025 12:55 AM
சென்னை:தமி ழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை,அளித்த பேட்டி:
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். அவர் பரிசீலனை செய்வார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, தனது வீட்டிற்கு அழைத்து பேசி உள்ளார். தமிழகத்தில், தே.ஜ., கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்பதில், அமித் ஷா உறுதியாக உள்ளார். தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் எந்த நிபந்தனையும் இல்லாமல், கூட்டணிக்கு வந்தவர்கள்.
பா.ஜ., தலைமை மீது எனக்கு, அதிருப்தி இல்லை. அமித் ஷா அழைத்த கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்திருந்தேன். இதில் சர்ச்சை எதுவும் இல்லை.
அரசியலில் என்னை கெட்டவர் எனக் கூறும் ஒவ்வொருவருக்கும் பதில் அளித்தால், அதில் என் நேரம் கழிந்து விடும். அதைவிட முக்கியமான வேலை உள்ளது.
இவ்வாறு, கூறி னார்.