ADDED : ஆக 31, 2011 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கம்பம் உத்தமபுரத்தை சேர்ந்தவர்கள் நல்ராசு, 35.
தேவி, 38. இருவரும் சேர்ந்து அன்னை தெரசா மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளை நடத்தி வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழுவிற்கு வங்கி கடன் வாங்கித்தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்றுள்ளனர். மொத்தம் 91 ஆயிரத்து 200 ரூபாய்க்கு மேல் வசூலித்தனர். யாருக்கும் கடனும் வாங்கித்தரவில்லை. வாங்கிய பணத்தையும் திரும்ப தரவில்லை. சுருளிப்பட்டியை சேர்ந்த நிரஞ்சனா மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இருவரையும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கைது செய்தார்.