ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணைக்கு உத்தரவு
ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணைக்கு உத்தரவு
UPDATED : மார் 29, 2024 06:23 PM
ADDED : மார் 29, 2024 05:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து விசாரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரம் மேற்க்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண் ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்று வீடியோ வெளியானது. இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
இந்நிலையில், இந்த வீடியோவை போலீஸ் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்திக்குமார், அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

