கோவிலுக்குள் செருப்புடன் சென்றேனா? காங்., அமைச்சர் ராஜேஷ்குமார் விளக்கம்
கோவிலுக்குள் செருப்புடன் சென்றேனா? காங்., அமைச்சர் ராஜேஷ்குமார் விளக்கம்
ADDED : நவ 12, 2026 06:00 PM
புதுக்கோட்டை: ‘‘தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, த.வெ.க.,வுடன் நல்ல உறவோடு இருக்கிறோம்,’’ என, காங்கிரசை சேர்ந்த, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ரஜேஷ்குமார் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இன்று (நவ.,12) அவர் அளித்த பேட்டி:
காங்கிரசை பொறுத்தவரை, தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம். தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, த.வெ.க.,வுடன் நல்ல உறவுடன் இருக்கிறோம்.
சுற்றுலாத் துறை வளர்ச்சி குறித்த ஆய்வுக்காக, கரூர் மாவட்டத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தேன். அக்கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிலுக்கு வெளிப்புறத்தில் ‘வெல்டிங்’ பணி நடந்த பகுதியில், ஆணிகள் கிடந்ததால், காலில் செருப்புடன் சென்றேன். கோவில் உள்ளே சென்றபோது, நான் செருப்பு அணியவில்லை. நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் குத்துவிளக்கு ஏற்றினாலே, நான் காலணியை கழற்றி விடுவேன். அது தான் என் வழக்கம். ஆனால், நான் செருப்புடன் கோவிலுக்குள் சென்றதாக, சிலர் தேவையற்ற சர்ச்சைகளை, வேண்டுமென்றே உருவாக்குகின்றனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
