sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை: கருணாநிதி பெயரை சூட்ட அவசரமா பஸ் நிலையத்தை திறந்துட்டாங்களோ?

/

பேச்சு, பேட்டி, அறிக்கை: கருணாநிதி பெயரை சூட்ட அவசரமா பஸ் நிலையத்தை திறந்துட்டாங்களோ?

பேச்சு, பேட்டி, அறிக்கை: கருணாநிதி பெயரை சூட்ட அவசரமா பஸ் நிலையத்தை திறந்துட்டாங்களோ?

பேச்சு, பேட்டி, அறிக்கை: கருணாநிதி பெயரை சூட்ட அவசரமா பஸ் நிலையத்தை திறந்துட்டாங்களோ?

8


ADDED : பிப் 17, 2024 12:17 AM

Google News

ADDED : பிப் 17, 2024 12:17 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., மருத்துவர் அணி இணைச் செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை:

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஒரு திட்டத்தை எடுத்தால், அது முழுமையடைந்த பின் தான் திறப்பு விழா நடத்துவார். கடந்த ஆட்சியில் 90 சதவீதம் பணிகள் முடிந்தால் கூட திறக்க மாட்டார். ஆனால், தி.மு.க., ஆட்சியில், 10 சதவீத பணிகளை முடித்து விட்டு, அதற்கு கருணாநிதி பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டுகிறார். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமை அடையவில்லை. அவசர கோலத்தில் பஸ் நிலையம் திறக்கப்பட்டு, அதற்கும் கருணாநிதி பெயரை சூட்டி உள்ளனர்.

மக்கள் பயன்பாட்டுக்கு என்பதை விட, கருணாநிதி பெயரை சூட்டணும் என்ற ஒரே காரணத்துக்காகவே, அவசர அவசரமா பஸ் நிலையத்தை திறந்துட்டாங்களோ?



அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:

தி.மு.க., - எம்.பி., ராஜா மேடையில் பேசியபோது, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வரலாற்றை தவறாக பேசி உள்ளார். இப்படி பேசித்தான் தி.மு.க.,வை வளர்க்க வேண்டுமா. மேடையில் ஏறினாலே பொய் மட்டும் தான் பேச வேண்டும் என சத்திய பிரமாணம் எடுத்துள்ளாரா? அவர் தன் பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தேர்தல் நேரத்துல, தன்னை யாரும் மறந்துட கூடாதுன்னு, இப்படி எல்லாம் ஏடாகூடமா பேசுறாரான்னு தெரியலையே!



த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி:

த.மா.கா., தலைவர் வாசன், பார்லிமென்டில் கடந்த நான்கு ஆண்டுகளில், 39 முறை, தமிழக நலன் சார்ந்த பிரச்னைகளுக்கும், மீனவர்கள், நெசவாளர்கள் என, அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார். தி.மு.க., ஆட்சியின் மூன்று ஆண்டுகளில், அரசின் நிர்வாகத்தை கண்டித்து, கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள, 78 மாவட்டங்களில், 16 போராட்டங்களை நடத்திஉள்ளோம்.

மாவட்டத்துக்கு ஒரு போராட்டம் நடத்தினாலே, 78 நடத்தியிருக்கணுமே... போராட்டம் நடத்துறதுல இவரது கட்சி, 'வீக்'காதான் இருக்குது!



தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் வீரா.ராஜமாணிக்கம் அறிக்கை:

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்கள், வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதுபோல, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

தேர்தல் நேரத்தில் கேட்டால் தான் ஆச்சு என நினைத்து, கோரிக்கை அம்பை வீசுறாரோ?








      Dinamalar
      Follow us