sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 30 ரயில் நிலையங்களில் 'டிஜிட்டல் லாக்கர்' வசதி

/

 30 ரயில் நிலையங்களில் 'டிஜிட்டல் லாக்கர்' வசதி

 30 ரயில் நிலையங்களில் 'டிஜிட்டல் லாக்கர்' வசதி

 30 ரயில் நிலையங்களில் 'டிஜிட்டல் லாக்கர்' வசதி


ADDED : பிப் 07, 2026 02:44 AM

Google News

ADDED : பிப் 07, 2026 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பயணியர் வருகை அதிகமாக உள்ள, 30க்கும் அதிகமான ரயில் நிலையங்களில், 'டிஜிட்டல் லாக்கர்' வசதி ஏற்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், பயணியர் அதிகம் வரும் சென்னை சென்ட்ரல், காட்பாடி, திருச்சி, மேல்மருவத்துார், திருவண்ணாமலை உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில், 'டிஜிட்டல் லாக்கர்' வசதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பயணியர் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்து செல்ல, இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இதற்கு கட்டணமாக, ஆறு மணி நேரத்துக்கு 60 ரூபாய்; 24 மணி நேரத்துக்கு 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மதுரை, கோவை, ராமேஸ்வரம், பெங்களூரு உட்பட, 30க்கும் அதிகமான ரயில் நிலையங்களில், இந்த வசதியை விரிவுபடுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, 'டிஜிட்டல் லாக்கர்' திட்டத்தை செயல்படுத்தும் போன்செல் நிறுவன விற்பனை பிரிவு மேலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது:

ரயில் நிலையங்களில், பயணியர் மற்றும் சுற்றுலா பயணியரின் உடைமைகளை பாதுகாத்து திருப்பி அளிக்கும் வகையில், ரயில்வேயிடம் ஒப்பந்தம் செய்து டிஜிட்டல் லாக்கர் வசதியை அளித்து வருகிறோம்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள முக்கிய ஆன்மிக சுற்றுலா மையங்களிலும், இவ்வசதியை ஏற்படுத்தி வருகிறோம். இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us