ADDED : பிப் 08, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூட்டுறவு வங்கிகளில், கால்நடை பராமரிப்புக்காக, நடப்பாண்டில் ஜனவரி வரை, 3.60 லட்சம் பேருக்கு, 1,884 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக, பலரும் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பம் செய்தனர்.
எனவே, குறிப்பிட்ட காலத்திற்கு புதிய கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில், மின்னணு பரிவர்த்தனை உள்ளிட்ட, 'டிஜிட்டல்' சேவைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, கடந்த பத்து மாதங்களில் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களால், 1.40 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
- பெரியகருப்பன்
கூட்டுறவு துறை அமைச்சர்

