ADDED : செப் 27, 2025 08:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:
தே.ஜ., கூட்டணி யில் இருந்து அ.ம.மு.க., வெளியேறியதற்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையின் துாண்டுதல் தான் காரணம் என, சிலர் தவறான கருத்து களை பரப்புகின்றனர்.
அடுத்தவர் துாண்டுதலின் பேரில் செயல்பட, அ.ம.மு.க., ஒன்றும் தெரியாத இயக்கம் அல்ல. அண்ணாமலை, தன் மீதான அனைத்து குற்றசாட்டுகளுக்கும் பதில் அளித்து விட்டார்.
தனது செயல்பாடுகளால், அவர் உயர்ந்த நிலைக்கு வருவார் என்ற நம்பிக்கை என்னைப் போன்றவர் களுக்கு உள்ளது.
எங்கள் கூட்டணி குறித்து, வரும் டிசம்பரில் தான் தகவல் வெளியிடுவோம். நடிகர் விஜயுடன், அ.ம.மு.க., கூட்டணி பேசி முடித்து விட்ட தாக கூறப்படும் தகவல் சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.