sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி: மதுரையில் இன்று கோலாகலம்

/

தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி: மதுரையில் இன்று கோலாகலம்

தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி: மதுரையில் இன்று கோலாகலம்

தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி: மதுரையில் இன்று கோலாகலம்


UPDATED : ஆக 02, 2024 11:19 AM

ADDED : ஆக 02, 2024 09:11 AM

Google News

UPDATED : ஆக 02, 2024 11:19 AM ADDED : ஆக 02, 2024 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று துவங்கி ஆக.,5 (திங்கள்) வரை நான்கு நாட்கள் அமர்க்களமாக நடக்கும் கண்காட்சியை காலை 10:15 மணிக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார்.

நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தென் மாவட்ட மக்களை 'ஷாப்பிங்'கால் திணறடிக்க தினமலர், சத்யா இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று (ஆக.2) கோலாகலமாக துவங்கியது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பொருட்களை மனம்போல் வாங்க 'இந்தாண்டு எப்ப தான் ஆடி வருமோ, ஆகஸ்ட் வருமோ, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை தினமலர் நடத்துமோ...' என ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தென் மாவட்ட மக்களை 'ஷாப்பிங்'கால் திணறடிக்க போகிறது தினமலர் கண்காட்சி.

கண்காட்சியில் ஆச்சரியப்பட வைக்கும் பல அதிசயங்கள் காத்திருக்கிறது மக்களே. குடும்பத்தோடு ஜாலியாக வாங்க, குதுாகலமாக ஷாப்பிங் செய்யுங்க, வாங்கும் பொருட்களுடன் அதிர்ஷ்டத்தையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

250 'ஏசி' ஸ்டால்கள்


கண்காட்சியில் தமிழக ஸ்டால்களுடன் வெளிநாடு, வெளி மாநிலத்தை சேர்ந்தவை என 250 'ஏசி' ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. தமுக்கத்தில் உள்ளே நுழைந்தால் 'இது நம்ம மதுரையா...' என ஆச்சரியத்தை ஏற்படுத்தி, ஹைடெக் மெகா ஷாப்பிங் உலகத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்படும்.

பெண்களே ! ரெடி மேட் ஆடைகள், அழகு சாதனம், பேன்ஸி பேக்ஸ், கலை நயமிக்க டிசைனர் ஜூவல்லரி, காலணிகள், பாரம்பரிய சேலை ரகங்கள் என நீங்கள் விரும்பியதை மனம்போல் வாங்கலாம். உங்கள் அழகான வளைக்கரங்களுக்கு மேலும் அழகூட்டும் வகையில் அட்டகாசமான டிசைன்களில் மெகந்தியை இலவசமாக வரையலாம். ஆண்களுக்கான ரெடிமேட் சர்ட், டிசர்ட், பேன்ட் உள்ளிட்ட ஆடைகளும் அட்டகாசமான தள்ளுபடி விலைகளில் கிடைக்கும்.

கண்காட்சியில் கடல் மாதிரி கடைகள் விரிந்து பரந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும். 10 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் விலை வரை உங்களுக்கு ஏற்ற பொருட்களை வாங்கலாம். ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் போன், அலங்கார மின் விளக்குகள், கொசு வலை என எந்த பொருட்களும் வாங்கலாம். தள்ளுபடி, இலவசத்தோடு சாம்பிள் பொருட்களும் அள்ளி தருவாங்க.

ருசியான உணவுகள்


ஸ்டால் ஸ்டாலாக பார்த்து ஷாப்பிங் செய்து சோர்ந்து விட்டால் என்ன செய்ய என கவலை வேண்டாம். புட்கோர்ட்டிற்குள் புகுந்து கமகமக்கும் வகை வகை உணவுகளை ஒரு கை பார்க்கலாம். மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா, பீட்சா, பர்கர், நண்டு லாலிபாப், பிங்கர் பிஷ் என வகை வகை உணவுகளை ருசிக்கலாம். ஸ்டால்களில் போண்டா, பஜ்ஜி, வடை, புட்டு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஐஸ்கிரீம், குல்பி என சாப்பாட்டு வகைகள் வரிசை கட்டியிருக்கும்.

போத்தீஸ் கேம்


கண்காட்சியில் குட்டீஸ்களை குஷிப்படுத்தும் போத்தீஸ் கேம் ஸோன் களைகட்டும். உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க பேட்டரி கார், வாட்டர் போட், சிக்குபுக்கு ரயில், வாட்டர் ரோலிங், ஹேப்பி பன் சிட்டி, பலுான் சூட்டிங், ஒட்டக சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் காத்திருக்கின்றன. அவற்றில் உங்கள் குட்டீஸ்களை விளையாட வைத்து அவர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைக்கலாம். ஸ்டால்களில் குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தகங்களும் வாங்கலாம். வண்ண வண்ண பலுான்கள் இலவசமாக கிடைக்கும்.

டூவீலர், கார் பார்க்கிங் வசதி, மருத்துவ உதவி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி., கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஷாப்பிங்குக்கு தேவையான அத்தனை ஆச்சரியங்களும் ஒரே இடத்தில் கொட்டிக்கிடக்கும் இக்கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் ஆனந்தம் தரும். குழந்தைகளுடன் ஆர்வமாய் பார்வையிடுங்க, குதுாகலமாக ரசிச்சு, ருசிச்சு விரும்பிய பொருட்களை அள்ளிட்டு போங்க.

இணைந்து கரம் சேர்ப்போர்:

அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அன்ட் ஆனந்தா, முத்து மெட்டல். கோ ஸ்பான்சர்: லட்சுமி கிரைண்டர், அல்ட்ரா பெர்பெக்ட். ஆடியோ பார்ட்னர்: இன்போ பஸ்.






      Dinamalar
      Follow us