ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...இங்கிலாந்து பயணி மூணாறில் நெகிழ்ச்சி
ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...இங்கிலாந்து பயணி மூணாறில் நெகிழ்ச்சி
ADDED : செப் 01, 2011 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : பிறந்த மண்ணை காண இங்கிலாந்தை சேர்ந்த டேவிட்வின், 45 ஆண்டுகளுக்கு பின் மூணாறு வந்தார்.
மூணாறில் 1949 ல் தேயிலை தோட்ட மேலாளராக இருந்தவர் கார்டில்வின் (இங்கிலாந்தை சேர்ந்தவர்). இவரது மனைவி கிளன்டா. இவர்களது மகன் டேவிட்வின். மூணாறில் வளர்ந்த இவர், ஆறு வயதில் பள்ளி படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். தற்போது ஓமனில் பணிபுரிகிறார். ரம்ஜான் விடுமுறையை யடுத்து,டேவிட்வின் மூணாறு வந்தார்.அவர் ''இங்கு கட்டடங்கள் அதிகரித்துள்ளதை தவிர,வேறு பெரிய மாற்றங்கள் இல்லை; அடுத்த ஆண்டு குடும்பத்தினருடன் மூணாறு வர திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.