முறையற்ற நம்பர் பிளேட்டா?இன்று முதல் வாகன உரிமம் ரத்து
முறையற்ற நம்பர் பிளேட்டா?இன்று முதல் வாகன உரிமம் ரத்து
ADDED : செப் 01, 2011 02:06 AM

மதுரை : முறையற்ற நம்பர் பிளேட்டை மாற்றுவதற்கான கெடு நேற்றுடன் முடிந்ததால், இன்றுமுதல் வாகன உரிமம் ரத்து செய்யப்படும்.
இதை தவிர்க்க, உடனடியாக முறைப்படி எழுதுவது உங்கள் 'பர்சிற்கும்', வாகனத்திற்கும் நல்லது. போக்குவரத்து வாகன சட்டப்படி, இரண்டு, மூன்று சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட் அகலம் 200 மி.மீ., உயரம் 100 மி.மீ., இருக்க வேண்டும். இலகுரக வாகனங்களுக்கு முன்புற நம்பர் பிளேட் அகலம் 340 மி.மீ., உயரம் 240 மி.மீ இருக்க வேண்டும். பின்புறம் நம்பர் பிளேட் அகலம் 500 மி.மீ., உயரம் 120 மி.மீ., இருக்க வேண்டும். நடுத்தர,
கனரக வாகனங்களுக்கு இருபுறமும் முறையே 340 மி.மீ., 200 மி.மீ., இருக்க வேண்டும். பெரும்பாலும் நம்பர் பிளேட்டுகளில் பின்பக்கம் எழுத்து 35 மி.மீ., உயரம், கனம் 7 மி.மீ., இருக்க வேண்டும். எழுத்துகளுக்கு இடையே இடைவெளி 5 மி.மீ., இருக்க வேண்டும். இதன்படி எழுதாத வாகனங்களின் உரிமம், இன்று முதல் ரத்து செய்யப்படும் என, அரசு எச்சரித்துள்ளது. உங்களின் முறையற்ற நம்பர் பிளேட்டை இப்போதே முறையாக எழுதினால் மட்டுமே வாகனம் தப்பிப்பதோடு, பணச்செலவும், மனஉளைச்சலும் ஏற்படாமல் இருக்கும்.