தினமலர் இல்ல திருமண விழா ! பிரதமர் மோடி, கவர்னர், முதல்வர் வாழ்த்து
தினமலர் இல்ல திருமண விழா ! பிரதமர் மோடி, கவர்னர், முதல்வர் வாழ்த்து
UPDATED : ஜூன் 09, 2025 12:41 PM
ADDED : ஜூன் 09, 2025 10:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் - சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜூன்-8) நடைபெற்றது.
மணமக்கள் அபராஜித் - தர்ஷனா ஆகியோரை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி , முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல், திரைப்பட துறையினர், தொழிலதிபர்கள் உள்பட பலர் திரளாக வந்து வாழ்த்தினர்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி திருமண விழாவுக்கு வாழ்த்து மடல் அனுப்பி மணமக்களை வாழ்த்தியுள்ளார். மேலும் மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் திருமணத்திற்கு வாழ்த்து அனுப்பி உள்ளனர்.