ADDED : பிப் 10, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. பிப்., மூன்று மற்றும் நான்காவது வாரத்தில் தண்டவாளங்கள் இணைப்பு பணி நடக்கிறது. அந்த வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
இதற்காக ஒன்பது ரயில்கள் இயக்கம் முழுமையாகவும் 38 ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் - எண்: 16322 ரயில் பிப்.15 முதல் 20ம் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.
மேலும் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் ஸ்டேஷன்களுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.