உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 17, 2026 08:39 PM
ADDED : நவ 17, 2026 08:36 PM
அ நிறம் | அளவு
சென்னை: திருச்சியில் இருந்து, மலேஷியாவின் சுபாங் நகருக்கு, டிச.,16ம் தேதி முதல், நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக, 'பட்டிக் ஏர் மலேஷியா' நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு மட்டுமே, நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோலாலம்பூர் நகர மையத்திற்கு மிக அருகில் உள்ள, சுபாங் விமான நிலையத்திற்கு, நேரடி சேவை தொடங்க வேண்டும் என, பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று, டிச.,16 முதல், திருச்சி – சுபாங் இடையே நேரடி விமான சேவையை, 'பட்டிக் ஏர்' தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
