எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தள்ளுபடி: ரிலையன்ஸ் டிஜிட்டல்
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தள்ளுபடி: ரிலையன்ஸ் டிஜிட்டல்
ADDED : ஜன 25, 2025 02:36 AM
சென்னை:'லேப்டாப்' உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படுவதாக, 'ரிலையன்ஸ் டிஜிட்டல்' நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை: 'ரிலையன்ஸ் டிஜிட்டல்' நிறுவனத்தில் 'டிஜிட்டல் இந்தியா விற்பனை' என்ற பெயரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'லேப்டாப், மொபைல்போன்கள், ஏசி, சிறியது முதல் பெரிய திரை 'டிவி'கள், பிரிஜ் போன்றவற்றை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
முன்னணி வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி வாங்குவோருக்கு, 26,000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி, 'கேஷ் பேக்' பெற முடியும். சிறிய பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், 'யுபிஐ'யை பயன்படுத்தும் போது, 1,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். எந்த பொருளை வாங்கினாலும், 5 சதவீத தள்ளுபடியும், இரண்டு பொருட்கள் வாங்கும் போது, 10 சதவீத தள்ளுபடியும் பெறலாம். வீடு மற்றும் கிச்சன் பொருட்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை வாங்கும் போது, 15 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.
நாடு முழுதும் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மை ஜியோ கடைகளிலும், www.relianedigital.in என்ற இணையதளத்திலும் இந்த சலுகைகளை நாளை வரை பெறலாம். பொருட்கள் வாங்க கடனுதவி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.