ADDED : ஜன 22, 2024 01:55 AM
சென்னை : திறந்த நிலை பல்கலையின், பி.எட்., தொலைநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக திறந்த நிலை பல்கலை பதிவாளர் செந்தில்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில் நடத்தப்படும், பி.எட்., படிப்பில் சேர, விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேடு, நாளை வெளியிடப்படுகிறது.
இந்த பி.எட்., படிப்பு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் மற்றும் பல்கலை மானிய குழுவின், தொலைநிலை கல்வி இயக்கத்தின் அங்கீகாரம் பெற்றது.
இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், டி.டி.எட்., ஆசிரியர் டிப்ளமா படிப்புடன், இளநிலை பட்டம் பெற்று, பணிபுரியும் ஆசிரியராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேட்டை, தமிழக திறந்தநிலை பல்கலையின், www.tnou.ac.in என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும், விபரங்களுக்கு, 044 - 2430 6657, 99766 98244 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.