ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் : வட்டார கல்வி அலுவலர் கைது
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் : வட்டார கல்வி அலுவலர் கைது
ADDED : டிச 15, 2025 09:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : ஆசிரியையிடம், 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி நகர வட்டார கல்வி அலுவலரான லதா பேபி, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பில் உள்ளார். ஜூலை மாதத்தில், வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்ற மணப்பாறையை சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியைக்கு, நான்கு நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. அதை பெறுவதற்காக, லதா பேபியிடம் கடிதம் கேட்டதற்கு, அவர், 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
விமலா, திருச்சி ஊழல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தார். போலீசார் அறிவுரையின்படி, திருச்சி நகர வட்டார கல்வி அலுவலகத்தில், விமலாவிடம், லஞ்சப்பணத்தை வாங்கிய லதா பேபியை போலீசார் கைது செய்தனர்.

