ADDED : செப் 24, 2024 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை தரமணியில், ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்கா உள்ளது. இது, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறது.
இங்கு ஆராய்ச்சியில் ஈடுபடும் பலர், 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்களை துவங்கி வருகின்றனர்.
இதேபோல், கிராமப்புற இளைஞர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், பல்கலை ஆராய்ச்சி பூங்கா அமைக்கும் பணியில், 'டிட்கோ' ஈடுபட்டுள்ளது.
கோவையில் உள்ள 'டைசல்' பூங்காவில், முதல் பூங்காவை அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது பூங்கா மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.