தீபாவளி கூட்ட நெரிசல்: முன்பதிவில்லா 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
தீபாவளி கூட்ட நெரிசல்: முன்பதிவில்லா 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED : அக் 30, 2024 04:52 PM

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் நலன் கருதி, சென்னையில் இருந்து முன்பதிவு இல்லா, 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்படி, சென்னை எழும்பூர்- திருச்சி சிறப்பு ரயில் இன்று(அக்.30) இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 5.45 மணிக்கு திருச்சி சென்று அடையும்.
அதாவது, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலுார், பரங்கிபேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று சேரும்.
*தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில்(06157) இயக்கப்படும்.
*எழும்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சை, வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில்(06155) இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல்-கோவை
சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம், திருப்பத்தூர், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்(06159) இயக்கப்பட உள்ளது
திருச்சி- தாம்பரம் சிறப்பு ரயில்
நாளை(அக்.31) பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.45 மணிக்கு தாம்பரம் அடையும்.