தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இழுபறி செய்த தேமுதிக; இழுத்துப்பிடித்தது திமுக!

இழுபறி செய்த தேமுதிக; இழுத்துப்பிடித்தது திமுக!

இழுபறி செய்த தேமுதிக; இழுத்துப்பிடித்தது திமுக!


UPDATED : பிப் 19, 2026 04:02 PM

ADDED : பிப் 19, 2026 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2026 04:02 PM ADDED : பிப் 19, 2026 11:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

அங்குமிங்கும் மாறி மாறி பேரம் பேசி, தேர்தல் அரசியலை கேலிக்கூத்தாக மாற்றிய தேமுதிக, தன் வரலாற்றில் முதல் முறையாக இப்போது தான் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதன் தேர்தல் வரலாறு இதோ!

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக, 2006ம் ஆண்டு விஜயகாந்தால் தொடங்கப்பட்டது தேமுதிக. கட்சி தொடங்கிய புதிதில், எல்லாக் கட்சிகளையும் விஜயகாந்த் விமர்சனம் செய்தார். இரு கட்சிகளுக்கும் மாற்று தானே என்று கூறி, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார்.

அந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட தேமுதிக, 8.4 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.* 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

* 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. 29 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார்.

* 2014 லோக்சபா தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. 14 தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி, எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.* 2016ம் ஆண்டு தேர்தலில் உருவான மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக தான் தலைமை வகித்தது. போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வியே கிடைத்தது. விஜயகாந்தும் தோல்வியை தழுவினார்.

* 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பாஜ இடம் பெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவும் இருந்தது. ஆனால், எந்த தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை.

* 2021ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக, எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது தேமுதிக. இரு கட்சிகளும் கூட்டணியில் இணைந்திருப்பது, இதுவே முதல் முறை.

திமுக கொடுத்த சிறப்பு சலுகை

யாருடன் கூட்டணி என்பதை இப்போது சொல்வோம், அப்போது சொல்வோம் என்று சொல்லிக் கொண்டே பிரேமலதா நாட்களை கடத்திக் கொண்டே சென்றது, இணையத்தில் பெரும் விமர்சனங்களை கிளப்பியது. அதற்கு தகுந்தபடி, அதிமுக, திமுக மற்றும் பாஜ நிர்வாகிகளுடன் அந்த கட்சியினர் பேச்சு நடத்தினர். எனினும், யாருடன் பேச்சு நடத்துகிறோம் என்பதை வெளிப்படையாக ஒருபோதும் அறிவிக்கவில்லை.

எல்லாமே திரை மறைவாகவே நடந்ததும், விமர்சனங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இப்போது தேர்தல் நெருங்கிய நிலையில், திமுகவுடன் தேமுதிக கூட்டணியில் இணைந்திருக்கிறது. பல மாதங்களாக கூட்டணியை அறிவிக்காமல் இழுபறி செய்த பிரேமலதா, இன்று திடீரென முடிவு செய்யும் வகையில் திமுக கொடுத்த பெஸ்ட் ஆஃபர் என்ன, சிறப்பு சலுகை என்ன என்பது, விரைவில் தெரியவரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us