தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் சுவாரஸ்ய விவரம்
தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் சுவாரஸ்ய விவரம்
UPDATED : மார் 21, 2024 04:02 AM
ADDED : மார் 21, 2024 12:53 AM

தி.மு.க., வேட்பாளர்கள்:
தொகுதி வேட்பாளர் பெயர் சீட் கிடைக்க காரணம்
வட சென்னை கலாநிதி வீராசாமி சிட்டிங் எம்.பி.,. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன்.
தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் சிட்டிங் எம்.பி.,. அமைச்சர் தங்கம் தென்னரசு பரிந்துரை
மத்திய சென்னை தயாநிதி மாறன் சிட்டிங் எம்.பி.,. முரசொலி மாறன் மகன்.
ஸ்ரீபெரும்புதுார் டி.ஆர்.பாலு சிட்டிங் எம்.பி.; கடைசி தேர்தல் எனக் கூறி வேண்டிக் கொண்டதால், ஸ்டாலின் இரக்கம் காட்டி உள்ளார்.
காஞ்சிபுரம், தனி செல்வம் சிட்டிங் எம்.பி. தனி தொகுதி என்பதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு.
அரக்கோணம் ஜெகத்ரட்சகன் சிட்டிங் எம்.பி.,. வசதியானவர்.
வேலுார் கதிர் ஆனந்த் சிட்டிங் எம்.பி., அமைச்சர் துரைமுருகன் மகன்.
திருவண்ணாமலை அண்ணாதுரை சிட்டிங் எம்.பி.,. அமைச்சர் வேலு மகன் கம்பன் தொகுதியை கேட்காததால், இவருக்கு மீண்டும் யோகம்.
நீலகிரி, தனி ராஜா சிட்டிங் எம்.பி.,. கட்சி துணை பொதுச் செயலர்.
துாத்துக்குடி கனிமொழி கருணாநிதியின் மகள். சிட்டிங் எம்.பி.,. கட்சி துணை பொதுச் செயலர்
* புதுமுகங்கள்
தர்மபுரி மணி நான்கு சட்டசபை தேர்தலில், போட்டியிட வாய்ப்பு கேட்டும் மறுக்கப்பட்டது. இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆரணி தரணிவேந்தன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலர். அவருக்கு கீழ் நான்கு சட்டசபை தொகுதிகள் வருகின்றன.
கள்ளக்குறிச்சி மலையரசன் அமைச்சர் வேலுவின் நம்பிக்கை பெற்ற, மாவட்ட செயலர் வசந்த கார்த்திகேயன் ஆதரவாளர்.
ஈரோடு பிரகாஷ் மாநில இளைஞர் அணி துணை செயலர். இளைஞர் அணிக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
கோவை கணபதி ராஜ்குமார் விருப்ப மனு கொடுத்தவர்கள் பட்டியலில், போட்டியிட அதிக ஆர்வம் காட்டியவர்.
பொள்ளாச்சி ஈஸ்வரசாமி ஒன்றிய செயலர். சரியான வேட்பாளர் என சர்வே 'டீம்' பரிந்துரை.
பெரம்பலுார் அருண்நேரு மூத்த அமைச்சர் நேருவின் மகன்.
தஞ்சாவூர் முரசொலி பாரம்பரிய தி.மு.க., குடும்பத்தை சேர்ந்தவர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
சேலம் செல்வகணபதி கட்சி தலைமையிடம் நெருக்கம். வழக்கு காரணமாக, எம்.பி., பதவி இழந்தவர். வழக்கில் வெற்றி பெற்றதால், அவருக்கு வாய்ப்பு.
தேனி தங்க தமிழ்ச்செல்வன் அ.ம.மு.க.,விலிருந்து இணைந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் பன்னீர்செல்வத்தை எதிர்த்து தோல்வி அடைந்ததால், மீண்டும் வாய்ப்பு.
சீட் கிடைக்காத 'சிட்டிங் எம்.பி.,க்கள்'
தொகுதி பெயர் சீட் கிடைக்காதற்கான காரணம்
திருநெல்வேலி ஞான திரவியம் மதபோதகரை தாக்கிய விவகாரம்; கல்குவாரி பிரச்னை; தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றாதது.
மயிலாடுதுறை ராமலிங்கம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.
திண்டுக்கல் வேலுசாமி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
தர்மபுரி செந்தில்குமார் ஹிந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தி, கட்சிக்கு நெருக்கடி உருவாக்கியது.
கடலுார் ரமேஷ் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.

