தி.மு.க.,- எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்கக்கோரி கட்சியினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை
தி.மு.க.,- எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்கக்கோரி கட்சியினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை
ADDED : ஆக 04, 2025 04:39 AM

ஆண்டிபட்டி: தி.மு.க., - -எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அக்கட்சி எம்.பி.,யின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் நேற்று முன்தினம் நடந்த, 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில், தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி தி.மு.க., -- எம்.எல்.ஏ., மகாராஜன் இருவரும் மேடையிலேயே ஒருவருக்கொருவர், 'முட்டாப்பயலே, ராஸ்கல்' என ஒருமையில் திட்டிக் கொண்டனர்.
தேனி கலெக்டர் ரஞ்ஜித் சிங் முன் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக, தி.மு.க., நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
ஆண்டிபட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம், பேரூர் கழகம் என்ற பெயரில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், 'கடந் த 25 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் பணியில் ஈடுபடும் எம்.பி., தங்கதமிழ்செல் வனை ஒருமையில் பேசி அவமதித்த எம்.எல்.ஏ., மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும். கட் சியினரை மதிக்காத மகாராஜன் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக, போஸ்டர் ஒட்ட மகாராஜன் தரப்பினர் தயாராகி வருகின்றனர்.
எம்.பி., - -எம்.எல்.ஏ., மோதலில், தி.மு.க.,வினரே போஸ்டர் ஒட்டியது, கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் தான் ஒட்டினரா; யார் ஒட்டியது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில், இந்த பிரச்னையை வளர்த்துக் கொண்டே செல்லக் கூடாது என்பதற்காக, இரு தரப்பிடமும் கட்சித் தலைமையில் இருந்து பேசியிருப்பதாக கூறுகின்றனர்.