ADDED : ஜூலை 06, 2025 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், பொதுச்செயலர் பழனிசாமியுடன் நான் கலந்து கொண்டேன்.
அது மட்டுமே உண்மை. ஆனால், எனக்கும், பொதுச்செயலர் பழனிசாமிக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகச் சொல்லி, பொய்யாக செய்தி வெளியிட்டுள்ளனர். இதை, தி.மு.க., - ஐ.டி., அணிதான் செய்துள்ளது. இப்படியொரு கேவலமான வேலையை அந்த அணி செய்து வருகிறது.
இதுபோல, நான், பா.ஜ.,வில் சேரப்போவதாகவும் தி.மு.க., - ஐ.டி., அணி வதந்தி பரப்புகிறது. நான் எந்த காலத்திலும் பா.ஜ.,வில் சேர மாட்டேன். ஆனால், கரூர் மாவட்ட தி.மு.க.,வில் இருந்து யார் யார் பா.ஜ.,வில் சேர உள்ளனர் என்பதும், அதற்காக யாருடன் பேச்சு நடத்தினர் என்பதும் எனக்கு தெரியும். அதற்கான பட்டியலும் என்னிடம் உள்ளது.
- விஜயபாஸ்கர்,
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,