தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இடைத்தேர்தல் பணிகளை தொடங்குங்கள் தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை

இடைத்தேர்தல் பணிகளை தொடங்குங்கள் தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை

இடைத்தேர்தல் பணிகளை தொடங்குங்கள் தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை

2


ADDED : அக் 25, 2026 02:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 02:31 PM

2


2
Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘தமிழகத்தில் காலியாக உள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு, எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், அதற்கான பணிகளை இப்போதே தொடங்குங்கள்’ என, தி.மு.க., நிர்வாகிகளை, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என, இரண்டு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த ஆறு தொகுதிகள் என, ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாகின. இவற்றில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. மீதமுள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில், நேற்று கட்சியின் தலைவர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் கே.என்.நேரு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித்தொடர்பு குழு செயலர் டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான தொகுதிகள். எனவே, அக்கட்சியை விட, தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்ற எண்ணத்திலேயே, நிர்வாகிகள் தேர்தலை எதிர்கொண்டனர். எனினும், இரண்டு தொகுதிகளிலும், தி.மு.க.,வே இரண்டாம் இடத்தை பிடித்தது. தாராபுரத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றோம். தீவிரமாக பணியாற்றி இருந்தால் தாராபுரத்தில் வெற்றி கிடைத்திருக்கும். இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

காலியாக உள்ள ஐந்து தொகுதிகளுக்கும், எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். எனவே, அத்தொகுதிகளில் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். ஓட்டுச்சாவடி கமிட்டிகளை உயிர்ப்பிக்க வேண்டும். வீடுவீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என, ஸ்டாலின் கூறியதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us