பிப்., 12ல் தி.மு.க., கூட்டணி கட்சிகள் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பிப்., 12ல் தி.மு.க., கூட்டணி கட்சிகள் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 08, 2026 07:34 AM

சென்னை: மத்திய பட்ஜெட்டை கண்டித்து, வரும் 12ம் தேதி, தமிழகம் முழுதும், தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கூட்டணி வெளியிட்ட அறிக்கை:
மத்திய பா.ஜ., அரசின் பட்ஜெட்டில், தமிழகத்திற்கான கல்வி நிதி 3,458 கோடி; நுாறு நாள் வேலை திட்ட நிதி 2,000 கோடி; குடிநீர் இணைப்பு திட்ட நிதி 3,112 கோடி ரூபாய் உட்பட, எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை. வளர்ச்சி திட்டங்களுக்கு, 1 பைசா கூட ஒதுக்காமல், தமிழக மக்களை பா.ஜ., அரசு புறக்கணித்துள்ளது.
தமிழகத்திற்கான நிதியும் இல்லை; வளர்ச்சி திட்டமும் இல்லை என மத்திய அரசு கைவிரித்த போதும், அவர்கள் காலில் விழுந்து, அடிமை அ.தி.மு. க., ஆதரிக்கிறது. நிதி மறுப்பு ஒருபுறம் என்றால், 100 நாள் வே லை திட்டத்ையே இனி இல்லாமல் செய்து, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை திரும்ப பெறவோ, அத ற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல், பா.ஜ., அரசு, ஏழை மக்கள் வயிற்றில் அடித்துள்ளது.
அதோடு, அமெரிக்காவின் விவசாயம் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டு, இந்திய விவசாயிகளின் வாழ்வையே பா.ஜ., அரசு கேள்விக்குறியாக்கி உள்ளது.
ஒரே நேரத்தில் 100 நாள் வேலை ஒழிப்பு சட்டம், விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தம் என, கிராமப்புற மக்கள் மீது இரட்டை அணுகுண்டு தாக்குதலை பா.ஜ., அரசு நிகழ்த்தியுள்ளது. அதற்கு உறுதுணையாக, அ.தி.மு.க., துரோகம் செய்து வருகிறது.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், அனைத்து மாநகரங்களிலும் தலா ஓர் இடம், பிற இடங்களில் நகர, ஒன்றிய, பேரூராட்சி அளவிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

