ADDED : நவ 07, 2025 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கை:
தமிழக சட்டசபை தேர்தல் நடப்பதற்கு, சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுகள், பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்க, தேர்தல் கமிஷன் முயற்சிக்கிறது.
அதன் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள 2002 - 2005 வாக்காளர் பட்டியல், முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் உள்ளது. எனவே, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து, தி.மு.க., கூட்டணி சார்பில், வரும் 11ம் தேதி காலை 10:00 மணிக்கு, அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

