வேட்புமனுவையே மறந்து வந்த திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன்
வேட்புமனுவையே மறந்து வந்த திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன்
ADDED : மார் 27, 2024 01:31 PM

தேனி: தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், வேட்புமனு தாக்கலுக்கு வந்தபோது, அப்படிவத்தையே மறந்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் ஏப்.,19ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று ஏராளமானோர் தாக்கல் செய்துள்ளனர். தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய தேனி கலெக்டர் அலுவலகம் வந்தார். வரும் அவசரத்தில் தனது வேட்புமனு படிவத்தை மறந்து வந்துள்ளதை உணர்ந்த தங்கதமிழ்ச்செல்வன், தனது உதவியாளரிடம் கூறினார்.
உடனடியாக, உதவியாளர் வேகமாக பைக்கில் சென்று வேட்புமனுவை எடுத்துக்கொண்டு ஓடி வந்தார். அந்த வேட்புமனுவை பெற்றுக்கொண்டு தங்கதமிழ்ச்செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்து, அந்த மனுவையே மறந்து வந்ததால், அவருடன் வந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி உள்ளிட்டோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

