ADDED : ஜூலை 29, 2025 04:14 AM
அ.தி.மு.க., சார்பில் தேர்வாகியிருந்த, தனபால் மற்றும் இன்பதுரை ஆகிய இருவரும், ராஜ்யசபா எம்.பி.,க்களாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டிருந்த தி.மு.க.,- எம்.பி.,க்கள் வில்சன், சிவலிங்கம், சல்மா மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல் என நால்வரும், கடந்த 25ல் பதவியேற்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் தேர்வாகியிருந்த தனபால் மற்றும் இன்பதுரை ஆகிய இருவரும் நேற்று காலையில், ராஜ்யசபாவில் உறுதிமொழி ஏற்று, ராஜ்யசபா எம்.பி.,க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்கள் இருவருக்கும் தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரும் கை குலுக்கி, வாழ்த்துக்களை தெரிவித்தனர். தவிர, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு அ.தி.மு.க., எம்.பி.,யாக உள்ள தர்மரும், கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
கூடவே, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் இருவரையும் வரவேற்று, தன்னுடைய இருக்கைக்கு அருகில் அமர வைத்துக் கொண்டார்.
-நமது நிருபர்-

