ADDED : ஜன 03, 2024 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பேரூராட்சி 15 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆஷா. இவரது கணவர் ராஜா 45. அங்குள்ள டாஸ்மாக் கடையில் இலவசமாக மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டு பாரில் நாற்காலிகளை அடித்து சேதப்படுத்தினார்.
இது தொடர்பாக கடையில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் வெளியாயின. பணகுடி போலீசார் அவரை கைது செய்தனர்.