டி.எஸ்.பி., 'பளார்' விட்டதில் பாதிப்பு தி.மு.க., நிர்வாகி தற்கொலை முயற்சி
டி.எஸ்.பி., 'பளார்' விட்டதில் பாதிப்பு தி.மு.க., நிர்வாகி தற்கொலை முயற்சி
ADDED : ஆக 08, 2025 02:56 AM

தஞ்சாவூர்:கும்பகோணத்தில், டி.எஸ்.பி., அடித்ததில், செவித்தி றன் பாதிக்கப்பட்ட தி.மு.க., நிர்வாகி தற்கொலைக்கு முயன்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணம் அருகே, சிவபுரத்தை சேர்ந்தவர் குமரவேலு, 40; தி.மு.க., மாவட்ட விவசாய பிரிவு துணை அமைப்பாளர். இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.
சிவபுரம் மாரியம்மன் கோவில் தேர் நிறுத்தும் இடத்தில், அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி வீடு கட்டும் பணியை துவங்கினா ர்.
கோவில் இடத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்த குமரவேலு, நாச்சியார்கோவில் போலீசில் புகார் அளித்தார். அதே சமயம், திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ராஜுவிடம், கலியமூர்த்தி புகார் அளித்தார்.
ஆக., 3ம் தேதி, கலியமூர்த் தி புதிதாக கட்டும் வீட்டில் சிமென்ட் கூரை அமைக்கும் பணியை துவங்கினார். குமரவேலு, அதை வீடியோ எடுத்தபோது, அங்கு வந்த டி.எஸ்.பி., ராஜு, குமரவேலுவை தகாத வார்த்தைகளால் திட்டி, கன் னத்தில் அறைந்து, அவரிடம் இருந்த போனை பறித்து நாச்சியார்கோவில் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்.
தி.மு.க., நிர்வாகிகள், உயர் கல்வித்துறை அமைச்சர் செழியனுக்கு தகவல் அளித்தனர். அவர் போலீசில் பேசி, குமரவேலுவை விடுவிக்க வைத்தார். டி.எஸ்.பி., அறைந்ததில், குமரவேலுக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது.
ம க்கள் முன்னிலையில், டி.எஸ்.பி., அடித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான குமரவேலு, நேற்று முன்தினம் விஷமருந்தி, நடந்தவற்றை வீடியோ பதிவு செய்து உறவினர் களுக்கு அனுப்பினார். உறவினர்கள், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
டி.எஸ்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குமரவேலுவின் மனைவி மாரியம்மாள், சகோதரர் ராமகிருஷ்ணன் ஆகியோர், தஞ்சாவூர் எஸ்.பி., ராஜாராமிடம் புகார் அளித்தனர்.

