ADDED : நவ 22, 2025 08:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நிலத்தகராறு திமுக நிர்வாகி ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் கல்வராயன்மலை கரியகோவில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். திமுக கிளை கழக செயலாளராக ராஜேந்திரன் பதவி வகித்துள்ளார்.
கரியகோவில் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

