அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
ADDED : மார் 18, 2026 02:10 PM

சென்னை: எஸ்.பி., வேலுமணி, உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்ய கோரி திமுக ராஜ்யசபா எம்பி கிரிராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி., வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், வீரமணி, கே.பி.அன்பழகன் ஆகிய7 பேர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு உள்ளதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தில் வழக்குப்பதிய முகாந்திரம் உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 7 பேர் மீதும் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

