sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுகவின் மெகா கூட்டணி... தனித்து விடப்பட்ட விஜய்!

/

திமுகவின் மெகா கூட்டணி... தனித்து விடப்பட்ட விஜய்!

திமுகவின் மெகா கூட்டணி... தனித்து விடப்பட்ட விஜய்!

திமுகவின் மெகா கூட்டணி... தனித்து விடப்பட்ட விஜய்!

17


ADDED : மார் 04, 2026 10:19 PM

Google News

17

ADDED : மார் 04, 2026 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக இம்முறை மெகா கூட்டணி அமைத்துள்ளது. அதே நேரத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி என்று அதிரடியாக அறிவித்த நடிகர் விஜய்யின் தவெக தனித்து விடப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். தேதிகள் அறிவிப்பதற்கு முன்னர், கூட்டணிகளை இறுதி செய்து, தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. அதில் பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னமும் நிறைவு பெறவில்லை.

மறுபுறம், திமுக, காங்கிரஸ் கூட்டணி பல்வேறு இழுபறிக்கு இடையே இன்று முடிவாகி ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது. திமுக தரப்பில் காங்கிரசுக்கு 28 சட்டசபை தொகுதிகளும், 1 ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டு உள்ளது.

இந்த கூட்டணி எப்படியும் சிதறிவிடும், உடைந்துவிடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறி வந்த நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி தொகுதிகள் எண்ணிக்கையும் (காங்கிரசுக்கு மட்டும்... திமுக தொகுதிகள் எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை) அறிவிக்கப்பட்டு விட்டது.

இன்றைய காங்கிரசுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்ட நிலையில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்திருக்கிறது. குறிப்பாக கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ கட்சிகள் இம்முறை திமுக கூட்டணியில் கை கோர்த்துள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிட்டால் இம்முறை திமுக மெகா கூட்டணியை கட்டமைத்து இருக்கிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்று இருந்த தேமுதிக திமுக கூட்டணிக்கு தாவி உள்ளது. அதே போல எஸ்டிபிஐ கட்சியும் திமுகவில் சேர்ந்திருக்கிறது.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்றுவிட்ட நிலையில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று கூட்டணி பேரத்தை வெளியிட்ட விஜய்யின் தவெக இப்போது தனித்து விடப்பட்டு உள்ளது. எப்படியும் திமுகவுடன் முட்டி மோதி காங்கிரஸ் தவெக பக்கம் சாய்ந்து விடும் என்று கணிப்புகள் பொய்யாகிவிட, யாரும் இது வரை கூட்டணியில் இல்லாத நிலையில் தவெக உள்ளது.

அதிமுக கூட்டணியில் சேரமுடியாது.. திமுக கூட்டணிக்கு என்றுமே வாய்ப்பே இல்லை (காரணம் தீயசக்தி). நாம் தமிழர் தனித்து தான் போட்டியிடுகிறது. எனவே அங்கும் போக முடியாது. இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருக்கும் கட்சிகள் என்று பார்த்தோமானால் அது ராமதாசின் பாமக மற்றும் புதிய தமிழகம் மட்டுமே. இவ்விரு கட்சிகளும் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பது தெரியவில்லை.

தற்போதைய அரசியல் சூழலில், தவெகவின் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை எந்த கட்சிகளும் திரும்பி பார்க்கவில்லை. கிட்டத்தட்ட வரக்கூடிய தேர்தலில் தவெகவும், நடிகர் விஜய்யும் தனித்துவிடப்பட்டு உள்ளனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.






      Dinamalar
      Follow us