தி.மு.க., அரசின் அலட்சியம் 100 நாள் வேலையில் குளறுபடி
தி.மு.க., அரசின் அலட்சியம் 100 நாள் வேலையில் குளறுபடி
ADDED : செப் 13, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், நடப்பு ஆண்டில், இதுவரை ஒரு குடும்பத்துக்கு, சராசரியாக ஒன்பது நாள் மட்டுமே வேலை தரப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், இந்தாண்டு, சராசரியாக 20 நாள் மட்டுமே வேலை வழங்க முடியும். நுாறு நாள் வேலை திட்டத்தை, 150 நாட்களாக அதிகரிப்போம் எனக்கூறி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகிறது.
இதற்கு, தி.மு.க., அரசின் அலட்சியமும், துரோகமும் தான் காரணம். இத்திட்டத்தில் பணியாற்ற, தமிழகத்தில், 85 லட்சத்து 70,000 குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. நடப்பாண்டில் 12 கோடி மனித வேலை நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும், 50 நாட்கள் வேலை வழங்க, 43 கோடி மனித வேலை நாட்கள் வேண்டும். இனியும் தாமதிக்காமல், அதிக வேலை நாட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
. - அன்புமணி, தலைவர், பா.ம.க.,