sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேரளாவிலும் கொள்ளையடிக்க தொடங்கி இருக்கும் திமுக; அண்ணாமலை குற்றச்சாட்டு

/

கேரளாவிலும் கொள்ளையடிக்க தொடங்கி இருக்கும் திமுக; அண்ணாமலை குற்றச்சாட்டு

கேரளாவிலும் கொள்ளையடிக்க தொடங்கி இருக்கும் திமுக; அண்ணாமலை குற்றச்சாட்டு

கேரளாவிலும் கொள்ளையடிக்க தொடங்கி இருக்கும் திமுக; அண்ணாமலை குற்றச்சாட்டு

25


ADDED : பிப் 12, 2026 07:45 PM

Google News

25

ADDED : பிப் 12, 2026 07:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று திமுகவினர் கொள்ளையடிக்க தொடங்கியுள்ளனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதி திமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ், கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில், கேரள மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கிரகாம் பெல்லின் உதவியாளராகவும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவுக்கு நெருக்கமான நபராகவும் அறியப்படுபவர் இந்த ரமேஷ்.

தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர். இன்னும் எத்தனை மாநிலங்களில், இந்த ரமேஷ் உள்ளிட்ட திமுகவினர், திராவிட மாடலை நிலை நாட்டியிருக்கிறார்கள் என்பது, கேரள மாநில போலீசார் விசாரணையில் தெரிய வரும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us