தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘அப்பாவை காணோம்’ என்ற விமர்சனம் நேரம் பார்த்து தி.மு.க.,வினர் பதிலடி

‘அப்பாவை காணோம்’ என்ற விமர்சனம் நேரம் பார்த்து தி.மு.க.,வினர் பதிலடி

‘அப்பாவை காணோம்’ என்ற விமர்சனம் நேரம் பார்த்து தி.மு.க.,வினர் பதிலடி


UPDATED : நவ 29, 2026 08:15 PM

ADDED : நவ 29, 2026 08:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 08:15 PM ADDED : நவ 29, 2026 08:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘அப்பாவை காணோம்’ என்று, சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதற்கு, தற்போது தி.மு.க.,வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

முந்தைய தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வென்ற, அவரது மகன் உதயநிதி, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையிலான, த.வெ.க., அரசின் செயல்பாடுகள் குறித்து, சட்டசபையில் உதயநிதி, கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஒரு முறை அவருக்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், ‘அப்பாவை காணோம்’ என, கண்ணுக்கு மேல் கையை உயர்த்தி, தேடுவது போல் சைகை செய்து கிண்டல் செய்தார். அதனை, த.வெ.க.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பி, தி.மு.க.,வினரை வெறுப்பேற்றினர்.

இந்நிலையில், தொகுதி மறு வரையறை தொடர்பாக, மத்திய அரசு கொண்டு வர உள்ள மசோதாவை ஆதரிக்க, தி.மு.க., முன்வந்துள்ளது. எனவே, காங்கிரஸ் தலைமையிலான, ‘இண்டி’ கூட்டணி தலைவர்களான, சோனியா, ராகுல், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர், நேற்று இரண்டு தனி விமானங்களில், சென்னை வந்து ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இதுகுறித்த செய்திகளையும் படங்களையும், ‘ரீல்ஸ்’ ஆக சமூக வலைதளங்களில், தி.மு.க.,வினர் பரப்பி வருகின்றனர். த.வெ.க.,விற்கு பதிலடி தரும் வகையில்,‘அப்பாவை காணோம் என்று சட்டசபையில் தேடினீர்கள். இப்போது பார்லிமெண்டில், ‘அப்பா என்ன முடிவெடுக்க போகிறார் என்று ஒட்டுமொத்த நாடும் காத்திருக்கிறது’ என, கிண்டலடித்து வருகின்றனர்.

இதற்கு எந்த பதிலும் அளிக்காமல், த.வெ.க., தகவல் தொழில்நுட்ப அணியினர் அமைதி காத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us