sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

/

பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

65


UPDATED : மார் 08, 2026 04:14 PM

ADDED : மார் 07, 2026 10:05 AM

Google News

65

UPDATED : மார் 08, 2026 04:14 PM ADDED : மார் 07, 2026 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள், 'தமிழகத்தைப் பாருங்கள்' என்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அவரது அறிக்கை: வரும் மார்ச் 9ம் தேதி திமுகவினரின் திருமுகம் கண்டு நான் மகிழும் வாய்ப்பு அமையவிருக்கின்ற இதே திருச்சி சிறுகனூரில்தான் 5 ஆண்டுகளுக்கு முன் 2021 மார்ச் 7ம் நாள் உங்களின் திருமுகம் கண்டேன். திமுக அரசு 4 ஆண்டுகளிலேயே, இந்தியாவிலேயே 11.19% என்கிற இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யாமல் வஞ்சிக்கின்ற மத்திய அரசினாலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தின் சீரழிவிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறோம். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் மேலும் வளர்ச்சியடைய இன்னும் 5 ஆண்டுகாலம் திமுக ஆட்சி தொடர வேண்டும். திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள், 'தமிழகத்தைப் பாருங்கள்' என்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியிருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகாலம் தொடரப்போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதுடன், சர்வதேசத் தரத்துடன் உலக நாடுகளுடன் போட்டி போடக்கூடிய அளவுக்கான வளர்ச்சியை நிச்சயம் பெற்றிருக்கும்.
கட்சியினரின் ஒருவன் என்ற உணர்வுடன் திமுகவிற்காக உழைக்கிறேன். நான் கூடுதலாக உழைக்க வேண்டும் என அன்றாடம் பணியாற்றுகிறேன்.

என்னைப் போலவே உழைக்கும் பேராற்றல் பெற்றவர்கள்தான் கட்சியினராகிய நீங்கள். உங்களைக் காணும்போது என் உழைப்பின் ஆற்றல் மேலும் பெருகும். எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வரலாற்று வெற்றியைப் படைக்க வருக உடன்பிறப்பே.. திருச்சி குலுங்கட்டும்… தி.மு.க வெல்லட்டும்.. சிறுகனூர் மாநாடு வரலாறு படைக்கட்டும். இவவாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.






      Dinamalar
      Follow us