தேர்தல் அதிகாரிகளை வைத்து குளறுபடி செய்கிறது தி.மு.க.,
தேர்தல் அதிகாரிகளை வைத்து குளறுபடி செய்கிறது தி.மு.க.,
ADDED : அக் 12, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க.,வில், உண்மையாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் பெரிய பதவிகளுக்கு வரலாம். இதற்கு உதாரணமாக, கிளை பொறுப்பில் இருந்து கட்சியின் பொதுச்செயலரான பழனிசாமியை கூறலாம்.
இப்படித்தான் அ.தி.மு.க.,வில் தலைவர்களாக இருக்கும் அனைவரும் அரசியலில் வளர்ந்துள்ளனர். ஆனால், தி.மு.க.,வில் குடும்ப அரசியலே நடக்கிறது. தி.மு.க., மற்றும் காங்., கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே நிறைந்துள்ளனர். தேர்தல் அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு, தி.மு.க., வினர் குளறுபடி செய்துள்ளனர். எனவே, அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள், வீடு வீடாக சென்று ஓட்டுகள் அனைத்தும் முறையாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஓட்டு இல்லாதோரின் பட்டியலை தயார் செய்து, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கொடுத்தால், தேர்தல் துறையினரிடம் வழங்குவோம். அவர்கள், நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்வோம். - சண்முகம் அ.தி.மு.க., - எம்.பி.,