மத பிரச்னைகளை தி.மு.க., துாண்டுகிறது: நயினார் நாகேந்திரன்
மத பிரச்னைகளை தி.மு.க., துாண்டுகிறது: நயினார் நாகேந்திரன்
ADDED : நவ 09, 2025 04:20 AM

'ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு, மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்' என சொன்ன முதல்வர் ஸ்டாலின், அதை செய்தாரா? தமிழ் மொழியையும், தமிழர் உரிமையையும், வெறும் அரசியல் கருவியாக மட்டுமே தி.மு.க., பார்க்கிறது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆனால், மின் கட்டணம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த, 11 ஆண்டுகளில், தமிழகத்துக்கு, 14 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், மோடி அரசு, ஒன்றுமே வழங்கவில்லை என, தி.மு.க., பொய் சொல்கிறது.
தமிழகத்தில் எந்த கிராமத்துக்கு சென்றாலும், போதை பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. குற்றம் நடந்த பின் நடவடிக்கை எடுப்பது பெரிய விஷயம் இல்லை. குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். மத ரீதியான பிரச்னைகளை தி.மு.க., அரசு துாண்டி விடுகிறது.
- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

