விவகாரத்தை மடை மாற்றிய தி.மு.க.,வினர்..: அந்துமணி பதில்கள்
விவகாரத்தை மடை மாற்றிய தி.மு.க.,வினர்..: அந்துமணி பதில்கள்
UPDATED : செப் 12, 2026 02:59 AM
ADDED : செப் 12, 2026 02:58 AM

முதல்வர் விஜய், சட்டசபை மாண்பை மீறியதாக தெரியவில்லை. அவரின் அன்றைய தி.மு.க., மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலே சொல்ல முடியாமல், உடல் மொழிக்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க.,வினர் விவகாரத்தை மடை மாற்றுகின்றனர்.
துணை ஜனாதிபதி சி..பி.ராதாகிருஷ்ணன், 'தினமலர்' நாளிதழின் நீண்ட கால வாசகர் மற்றும் நலன் விரும்பி. தினமலர் கோட்பாடு குறித்து நன்கு அறிந்தவர். 'உண்மையை பாதுகாக்கப் போராடும் தர்ம யுத்தம்' என்பதை கண்முன்னே இருந்து பார்த்து, அனுபவித்து சொல்லி இருக்கிறார். அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்!
'அது தான் தாயுள்ளம்' என, உலகம் முழுதும், ரமாபாயின், 'வீடியோ'வைப் பார்த்தவர்கள் கொண்டாடுகின்றனர். தன்னலம் கருதாமல், தங்களின் குழந்தைகளைப் பற்றிய சிந்தனையிலேயே, பிள்ளைகளைப் பெற்றவர்கள் இருப்பர். ரமாபாயும் அத்தகைய தாய்!
களிமண்ணால் ஆன விதை பிள்ளையார், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் எங்கும் கிடைக்கிறது, ஜெயலெட்சுமி. செயற்கை சாயம் பூசாத, விதை பிள்ளையார்களை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும்.
முன்பு, வெகுளித்தனமாக இருந்த இந்தியர்களை அடிமைப்படுத்த, பிரிட்டிஷாருக்கு வசதியாக இருந்தது. அந்தக் காலம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் நாம், ஒவ்வொரு நாட்டின் நடவடிக்கைகளையும் தான் உன்னிப்பாக கவனித்து வருகிறோமே! மத்திய, மாநில அரசுகள், பிரிட்டன் மட்டுமல்ல, பல நாடுகளிலிருந்தும் முதலீடுகளை ஈர்த்து, பாதுகாப்பான வளர்ச்சியை நோக்கி செல்வதால், பயப்பட வேண்டாம்; விரைவில் வல்லரசாகி விடுவோம் பாருங்கள்!
'வாரமலர்' பொறுப்பாசிரியர் கொடுக்கும் உத்தரவுகளோடு சேர்த்து இப்போது, 'தினமலர்' ஆசிரியரும் உத்தரவு போட்டு, தினமும் கேள்வி - பதில் எழுதித் தரச் சொல்வதால், காலை, 5:00 மணி முதல், 'இ - மெயில்' வாயிலாக குவியும் கடிதங்களையும் படித்து, போஸ்ட் கார்டுகள், இன்லாண்டு கடிதங்கள் என அனைத்தையும் படிக்க வேண்டும்; இரவு, 10:00 மணிக்கும், 'அப்டேட்' செய்ய வேண்டி இருக்கும். வேலை செய்வது தான் நமக்கு மிகவும் பிடித்த விஷயமாயிற்றே!
