உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 07, 2026 04:24 AM

அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக கருப்பு சட்டை அணிந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வந்திருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மட்டும், கருப்பு 'டீ சர்ட்' அணிந்து வந்திருந்தார்.
வழக்கமாக, சபாநாயகர் இருக்கையை ஒட்டியுள்ள கதவு வழியாக எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது இருக்கைக்கு செல்வது வழக்கம்.
ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் வரும் சபையின் பின்பக்க பகுதி வழியாக வந்து, தன் இருக்கையில் உதயநிதி அமர்ந்தார்.
சபை முடிந்ததும் வெளியே வந்த உதயநிதி, விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி கருப்பு சட்டை அணிந்து வந்தததாக தெரிவித்தார்.
