பா.ஜ., நிர்வாகி குறித்து ஆபாச பேச்சு தி.மு.க., - எம்.பி., மகன் கைது
பா.ஜ., நிர்வாகி குறித்து ஆபாச பேச்சு தி.மு.க., - எம்.பி., மகன் கைது
ADDED : ஜூன் 05, 2026 02:53 AM

சென்னை: 'பைக்' பந்தய வீராங்கனையும், பா.ஜ., நிர்வாகியுமான அலிஷா அப்துல்லாவை அவதுாறாக பேசிய வழக் கில், தி.மு.க., - எம்.பி., யின் மகன் திருச்சி சூர்யாவை, சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து உள்ளனர்.
சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அலிஷா அப்துல்லா, நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:
'மை இந்தியா' என்ற 'யூ டியூப்' தளத்தில், 12 நாட்களுக்கு முன் வீடியோ ஒன்று வெளியானது.
அதில் எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் குறித்து ஆபாசமான, இழிவான மற்றும் பாலியல் ரீதியான கருத்துகளை, யூ டியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகிய இருவரும் பேசி உள்ளனர்.
எனவே, இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யாவை நேற்று கைது செய்தனர். 'யூ டியூபர்' முக்தாரை தேடி வருகின்றனர்.
