ஒருபோதும் உண்மை பேசாத தி.மு.க.,: நயினார் நாகேந்திரன்
ஒருபோதும் உண்மை பேசாத தி.மு.க.,: நயினார் நாகேந்திரன்
UPDATED : அக் 23, 2025 03:42 AM
ADDED : அக் 23, 2025 02:45 AM

சென்னை: ஒரு போதும் உண்மை பேசாத திமுக என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது
‛டெல்டா மாவட்டத்துக்கு சொந்தக்காரர் என முதல்வர் ஸ்டாலின் சொல்லிக் கொள்கிறார். ஆனால், டெல்டாவில் 12 லட்சம் ஹெக்டேர் நெல் பயிர்கள், நீரில் மூழ்கி உள்ளன. ஏற்கனவே கொள்முதல் செய்த நெல்லை வைக்க இடமில்லை.
அறுவடை செய்யப்பட்ட நெல்லில், 22 சதவீத ஈரப்பதம் இருக்கும். அதை, அப்படியே கொள்முதல் செய்தால் தான், விவசாயிகள் லாபம் பெறுவர். ஆனால், ஒரு மூட்டை நெல்லை கொள்முதல் செய்ய, அதிகாரிகள் 40 ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர்.
உண்மையை ஒருபோதும் தி.மு.க., பேசுவதில்லை. எப்போது கேட்டாலும், 'மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டது; எத்தனை பெரிய மழையையும் அரசு எதிர்கொள்ளும்' என, முதல்வரும் அமைச்சர்களும் திரும்பத் திரும்ப சொல்கின்றனர்.
ஆனால், எப்போது மழை பெய்தாலும், வௌ்ளத்தில் வீடுகள் மூழ்குவது தொடர்கிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.