தி.மு.க. கொடி நடும் பணியில் ஊராட்சி துப்புரவு பணியாளர்?
தி.மு.க. கொடி நடும் பணியில் ஊராட்சி துப்புரவு பணியாளர்?
ADDED : பிப் 25, 2026 10:18 PM

பல்லடம் : பல்லடத்தில் தி.மு.க. கொடிகள் நடும் பணியில் ஊராட்சி துப்புரவுப்பணியாளர்கள் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம்-, பொள்ளாச்சி ரோட்டில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆய்வு மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. அமைச்சர்களை வரவேற்கும் விதமாக, பொள்ளாச்சி ரோட்டில், தி.மு.க., கட்சி கொடிகள் நடப்பட்டு, பேனர்கள் வைக்கும் பணி நடந்தது.
இதில், துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக, பா.ஜ. ஊடகப்பிரிவு துணைத் தலைவர் வித்யபிரகாஷ், ஆதாரங்களுடன், முதல்வருக்கு அனுப்பிய மனு:வெங்கிட்டாபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வரும் அமைச்சர்களை வரவேற்பதற்காக தி.மு.க., கட்சிக் கொடிகள் நடும் பணியில், பணிக்கம்பட்டி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இது அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு முரணானது. சட்டப்படி இது குற்றமாகும். துப்புரவு பணியாளர் ஒருவர், சீருடையுடன், கட்சி கொடி நடும் பணியில் ஈடுபட்டுள்ள போட்டோ ஆதாரம் உள்ளது. 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆராய்ந்தால், துப்புரவு பணியாளர்கள் உட்பட, ஜி ராம் ஜி வேலை உறுதி திட்ட பணியாளர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவரும். விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.09:26 P

