தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'தி.மு.க., பைல்ஸ் - 3 விரைவில் வெளியாகும்'

'தி.மு.க., பைல்ஸ் - 3 விரைவில் வெளியாகும்'

'தி.மு.க., பைல்ஸ் - 3 விரைவில் வெளியாகும்'


ADDED : பிப் 17, 2025 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 07:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்,: ''ஊழல் குறித்த, 'தி.மு.க.,பைல்ஸ் - 3' விரைவில் வெளியாக போகிறது,'' என, பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் பேசினார்.

பெண்ணாடத்தில், கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, மத்திய அரசு 43,000 கோடி ரூபாயை ஒரே தவணையில் வழங்கி உள்ளது. அந்த நிதி எங்கே?

மயிலாடுதுறையில் இரு இளைஞர்கள், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; இதுகண்டிக்கத்தக்கது. வரும் 2026, தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், மகளிர் உரிமை தொகை 2,000 ஆக உயர்த்திகொடுக்கப்படும். ஊழல் குறித்த, 'தி.மு.க., பைல்ஸ் - 3' விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us