'பா.ஜ.,வுடன் கைகோர்க்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது'
'பா.ஜ.,வுடன் கைகோர்க்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது'
ADDED : ஆக 10, 2026 08:19 AM

மதுரை: ''மத்திய பா.ஜ., அரசு கொண்டுவரும், லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது,'' என, த.வெ.க., அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: காவிரி விவகாரத்தில் சட்டசபையில் தமிழக அரசு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தற்போது லோக்சபா தொகுதி மறுசீரமைப்புக்கு எந்த தேவையும் ஏற்படவில்லை. ஆனால், மத்திய பா.ஜ., அரசு, அரசியல் காரணங்களுக்காக இந்த மசோதாவை கொண்டுவருகிறது.
இதனால், மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தின் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. சிறுபான்மை மக்களை ஒதுக்குவது தான் இந்த மசோதாவின் நோக்கம். தமிழகத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து இதை முறியடிக்க வேண்டும்.
பா.ஜ.,வுடன் கைகோர்க்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. பா.ஜ.,வுக்கு ஆதரவான மசோதா தாக்கலாகும்போது தி.மு.க., வெளிநடப்பு செய்யப் போவதாக தகவல் வருகிறது.
அப்படி செய்தால் அது தமிழகத்திற்கு மட்டுமல்ல; நாட்டிற்கே தி.மு.க., செய்யும் துரோகம். குடும்பத்தை காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழக நலனையும் பா.ஜ.,விடம் அடகு வைக்க பார்க்கிறார் தி.மு.க., தலைவர் ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.
