தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க.,வில் மறுசீரமைப்பு; 9 பேர் குழு நியமனம்

 தி.மு.க.,வில் மறுசீரமைப்பு; 9 பேர் குழு நியமனம்

 தி.மு.க.,வில் மறுசீரமைப்பு; 9 பேர் குழு நியமனம்

2


ADDED : ஜூலை 01, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 05:46 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய, 19 குழுக்களை அமைத்து, 38 பேரை கள ஆய்வுக்கு அனுப்பினேன்.

'ஆன்லைன்' வழியாக 'உடன்பிறப்பின் குரல்' என்ற இணையதளத்தை உருவாக்கச் சொல்லியிருந்தேன். அதில், 6 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன; அவற்றை படித்துள்ளேன்.

அனைவரின் ஒட்டுமொத்த கருத்து, கட்சியின் மறுசீரமைப்பு என்பது தான். மறுசீரமைப்பும், மறுகட்டுமானமும் மிக அவசியம் என்பதால், சீரான மாற்றங்களை பரிந்துரைக்க, மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சக்கரபாணி, சிவசங்கர், தமிழரசி மற்றும் முன்னாள் எம்.பி., அப்துல்லா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரந்தாமன், எழிலன் மற்றும் கருணா இடம் பெற்றுள்ளனர்.

அக்குழு தன் பரிந்துரைகளை, ஆகஸ்ட் முதல் வாரத்தில் என்னிடம் வழங்கும். அதை உயர்நிலை செயல் திட்டக் குழு, மாவட்டச் செயலர்களிடம் விவாதித்து, மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us