100 நாளில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும்: அண்ணாமலை
100 நாளில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும்: அண்ணாமலை
ADDED : டிச 25, 2025 09:13 PM

கோவை: ஆட்சி முடிவடைய உள்ளதால் திமுகவுக்கு பயம் உள்ளது. 100 நாளில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: கடந்த சில நாட்களாக அரசு பஸ் விபத்துகளை சந்தித்து வருகிறது. அரசு பஸ்சை ஆய்வு செய்ய வேண்டும்.தமிழக அரசு எல்லா அரசு பஸ்களை ஆய்வு செய்துதர சான்றிதழை வழங்க வேண்டும். 10 15 ஆண்டுக்கு மேல் பஸ்கள் ஓடினால் அதற்கு சான்று இருக்கிறதா என பார்க்க வேண்டும். தேர்தலுக்கு 3 மாதம் உள்ளது. தேஜ கூட்டணி எப்படி அமையும் என பொறுத்து இருந்து பார்ப்போம் ஓபிஎஸ், தினகரன் பிரேமலதா நல்ல முடிவு எடுப்பார்கள். தேஜ கூட்டணி வலிமையாக தேர்தல் களத்தில் பெரும் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகளை பார்த்து கொண்டு இருக்கிறோம் நேரம் இருக்கிறது பொறுமை காப்போம்.
திமுகவை பொறுத்தவரை 100 நாட்கள் உள்ளது. இதனால் ,எஸ்ஐஆர் உள்ளிட்ட பயம் இருப்பது நியாயம் தான். திமுக இன்னும்100 நாட்கள் ஆட்சியில் இருப்பார்கள்.100 நாளில் இந்த ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி. எல்லா கட்சிகளும் தலைவர்களும் மரியாதையாக நடத்தப்பட்ட ஆட்சியில் அமர்வது உறுதி. நாங்கள் மத அரசியல் எப்போதும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

